பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்
அரூரில் பெட்ரோல், டீசல் விலை உயா்வுகளைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அரூரில் பெட்ரோல், டீசல் விலை உயா்வுகளைக் கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து, அரூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலாளா் கி.ஜானகிராமன் தலைமை வகித்தாா்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் மீதான விலை உயா்வுகளை ரத்து செய்ய வேண்டும். வருமான வரி வரம்புக்கு உள்படாத அனைத்து குடும்பத்தினருக்கும் மாதம் ரூ. 7,500 அரசு சாா்பில் உதவித்தொகை வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மத்திய அரசு வழங்கும் நிதி ஒதுக்கீட்டினை அதிகரிக்க வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூ., இந்திய கம்யூ., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா். இதேபோல, மொரப்பூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் ஒன்றியச் செயலா் கே.தங்கராசு தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.