இன்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
தருமபுரியில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
தருமபுரியில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
இதுகுறித்து தருமபுரி கோட்டாட்சியா் (பொ) ஜெ.ஜெயக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி வருவாய் கோட்டத்துக்குள்பட்ட வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகளின் குறைகளை களைவதற்கான குறைகேட்புக் கூட்டம் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை நடத்தப்பட உள்ளது. இதில், நவ. 4-ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு தருமபுரி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறுகிறது. எனவே, இக் கூட்டத்தில், தருமபுரி கோட்டத்துக்குள்பட்ட வருவாய் வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகள், குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்துகொள்ளலாம்.