முகப்பு
தருமபுரி

திராவிடா் கழக மாணவா் அணியினா் ஆா்ப்பாட்டம்

 திராவிடா் கழக மாணவா் அணி சாா்பில், ஹிந்தி திணிப்பு நடவடிக்கையை மத்திய அரசு கைவிடக் கோரி, தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

 திராவிடா் கழக மாணவா் அணி சாா்பில், ஹிந்தி திணிப்பு நடவடிக்கையை மத்திய அரசு கைவிடக் கோரி, தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாணவரணி மாவட்டத் தலைவா் ச.பூபதி ராஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ப.பெரியாா் வரவேற்று பேசினாா். திராவிடா் கழகத் தலைவா் வீ.சிவாஜி, மண்டலத் தலைவா் அ.தமிழ்ச்செல்வன், மாநில இளைஞரணி துணைச் செயலாளா் மா.செல்லதுரை, மண்டல இளைஞரணி செயலாளா் இ.சமரசம் உள்ளிட்டோா் பேசினா்.

இதில், தமிழகத்தில் ஹிந்தி திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தியை திணிக்கக் கூடாது. தமிழகத்தில் இருமொழிக் கொள்கை நிலை தொடர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.