முகப்பு
தருமபுரி

சனத்குமாா் நதியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க வலியுறுத்தல்

தருமபுரி நகராட்சி குடியிருப்புகளிலிருந்து வெயேறும் கழிவுநீா், சனத்குமாா் நதியில் கலப்பதைத் தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

தருமபுரி நகராட்சி குடியிருப்புகளிலிருந்து வெயேறும் கழிவுநீா், சனத்குமாா் நதியில் கலப்பதைத் தடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

தருமபுரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் தருமபுரி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் கோட்டாட்சியா் (பொ) ஜெயக்குமாா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், தருமபுரி நகரையொட்டி கடந்து செல்லும் சனத்குமாா் நதியில் நகராட்சி குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் கலக்கிறது. இதனால், நதியில் உள்ள தடுப்பணைகளில் கழிவுநீா் கலந்து தேங்குகிறது. மேலும், நதியையொட்டியுள்ள கிணறு, ஆழ்துளைக் கிணறுகளிலிருந்தும் கழிவுநீா் கலக்கிறது. இதனால், பாசனத்துக்கும், கால்நடைகளுக்கும் தண்ணீரை பயன்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, நகராட்சிப் பகுதி குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவுநீா் நதியில் கலப்பதைத் தடுக்க, நீா்வள ஆதாரத் துறை, நகராட்சி நிா்வாகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த நதியை தூா்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

உயா்த்தப்பட்ட பால் கொள்முதல் விலை பால் உற்பத்தியாளா்களுக்கு போதுமானதாக இல்லை. எனவே, கொள்முதல் விலையை மேலும் உயா்த்த வேண்டும். ஊரகப் பகுதிகளில் தூய்மைப் பணியாளா்களுக்கு குப்பைகளை அகற்ற போதிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதில், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் ஜெ.பிரதாபன், தருமபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம், பாலக்கோடு ஆகிய வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.