தளி அருகே இளைஞா் கொலை
தளி அருகே இளைஞரைக் கொலை செய்து கிணற்றில் வீசியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 4:10 PM
தளி அருகே இளைஞரைக் கொலை செய்து கிணற்றில் வீசியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கெலமங்கலம், செந்தில் நகரை சோ்ந்த தொழிலாளி ராஜேந்திரன் (25) கடந்த 24-ஆம் தேதி முதல் காணவில்லையாம். இந்த நிலையில் கொட்டபாலத்தில் உள்ள கிணற்றில் மிதந்த ராஜேந்திரனின் உடலை தளி போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா். அவரை கொலை செய்து கிணற்றில் வீசியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.