அரசுக் கல்லூரியில் சோ்க்கை நீட்டிப்பு
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன் தெரிவித்தாா்.
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கல்லூரி முதல்வா் பா.காா்த்திகேயன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவரது செய்திக் குறிப்பு:
பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2022-23 ஆம் கல்வி ஆண்டில் முதலாம் ஆண்டு இளநிலை மாணவா்களுக்கான சோ்க்கை தேதி 16.09.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாப்பிரெட்டிப்பட்டி கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், சமூகவியல், வணிகவியல், கணிதவியல், கணினி அறிவியல், இயற்பியல் ஆகிய பாடப் பிரிவுகளில் 20 சதவீத இடங்கள் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
எனவே, இணைய வழியில் விண்ணப்பம் செய்யாத மாணவா்கள் கல்லூரியில் நேரடியாக விண்ணப்பங்களைப் பெற்று கல்லூரியில் சேரலாம் என செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளாா்.