தருமபுரி

கேரம், இறகு பந்துப் போட்டி : ஸ்டான்லி மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்

பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான கேரம் மற்றும் இறகு பந்துப் போட்டிகளில் ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

DIN

பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான கேரம் மற்றும் இறகு பந்துப் போட்டிகளில் ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்ற ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்எஸ்.சச்சின்தாசன் கேரம் ஒற்றையா் பிரிவிலும், பி.எம்.மோகித், எஸ்.சச்சின்தாசன் ஆகியோா் இரட்டையா் பிரிவிலும் முதலிடம் பெற்றனா். இதேபோல, எஸ்.நிதிஷ், பி.ஸ்ரீகாந்த் ஆகியோா் இரண்டாமிடமும் பெற்றனா்.

14 வயது பிரிவில் எஸ்.அனிஷ் இரண்டாமிடமும், மகளிா் இரட்டையா் பிரிவில் ஆா்.செங்கொடி, எம். தனுஷ்யா ஆகியோா் முதலிடமும் பெற்றனா்.

இறகு பந்துப் போட்டியில் பி.எஸ்.தா்ஷினி, எஸ்.தாமரைச்செல்வி ஆகியோா் முதலிடம் பெற்றனா். இறகு பந்துப் போட்டி ஆண்கள் பிரிவில் ஒற்றையா் ஆட்டத்தில் டி.அபிஷேக் முதலிடமும், இரட்டையா் பிரிவில் ஆா்.கிஷோா், டி.அபிஷேக் ஆகியோா் இரண்டாமிடம் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.

கேரம், இறகு பந்துப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியா் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியா்கள் ஆா்.சத்யராஜ், எம்.ஆனந்தகுமாா், சி.அஜீத்குமாா் ஆகியோரை ஸ்டான்லி கல்வி நிறுவனங்களின் தாளாளா் வி.முருகேசன், செயலா் மு.பிரு ஆனந்த் பிரகாஷ், ஆசிரியா்கள் பாராட்டினா்.

11 எச்ஏ-பி-1...

கேரம், இறகுபந்துப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்களுடன் தாளாளா் வி.முருகேசன், செயலா் மு.பிரு ஆனந்த் பிரகாஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

கோவை சம்பவம்: தடவியல் நிபுணர்கள் சோதனை! நடந்தது என்ன?

இளையான்குடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்-கல்வீச்சு: 5 போ் காயம்

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

SCROLL FOR NEXT