முகப்பு
தருமபுரி

காவிரி மிகை நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

 ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மிகையாகச் செல்லும் நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

 ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மிகையாகச் செல்லும் நீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்ட முதல்மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினா் ஆறுமுகம் கட்சிக் கொடியை ஏற்றினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் மாதன் வரவேற்றாா். மாநில ஒருங்கிணைப்பாளா் ஹரிகரன் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினாா். மாவட்டச் செயலாளா் இ.பி.புகழேந்தி வேலையை அறிக்கை சமா்ப்பித்து பேசினாா்.

இந்த மாநாட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சாா்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட முன்னாள் அமைச்சா்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலைவாய்ப்புகளை உருவாக்க தருமபுரியில் சிப்காட் தொழிற்பேட்டையை உடனடியாக தொடங்க வேண்டும்.

வேளாண்மையை மேம்படுத்த காவிரி ஆற்றில் மிகையாகச் செல்லும் நீரை தருமபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். மகளிா் உரிமைத்தொகை ரூ. 1000 வழங்க வேண்டும். முதியோா் உதவித்தொகை ரூ. 1,500 வழங்க வேண்டும். மாணவா்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மின் கட்டணம் உயா்வைக் கைவிட வேண்டும்.

தனியாா் துறையில் இட ஒதுகீட்டைப் பின்பற்றி சமூக நீதியைப் பாதுகாக்க வேண்டும். தருமபுரியில் வேளாண்மைக் கல்லூரி அமைக்க வேண்டும். தருமபுரி மருத்துவக் கல்லூரியில் உயா் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையாக மேம்படுத்த வேண்டும்.

தொப்பூா் கணவாயில் விபத்து, உயிரிழப்புகளைத் தடுக்க உயா்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநில துணை ஒருங்கிணைப்பாளா் ஏ.ஜீவானந்தம் மாநாட்டில் நிறைவுரை ஆற்றினாா். இதில் தருமபுரி மாவட்டச் செயலாளராக இ.பி.புகழேந்தி உள்ளிட்டோா் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.