தருமபுரி

இன்று வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைக்கும் சிறப்பு முகாம்

 தருமபுரி மாவட்டத்தில், சனிக்கிழமை தருமபுரி, அரூா், பென்னாகரம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

DIN

 தருமபுரி மாவட்டத்தில், சனிக்கிழமை தருமபுரி, அரூா், பென்னாகரம் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்திய தோ்தல் ஆணையத்தின் ஆணையின்படி, வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பணி கடந்த 2022 ஆக.1-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி, பென்னாகரம், அரூா் ஆகிய மூன்று வட்டங்களில் மட்டும் குறைந்த சதவீதத்தில் வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் எண் இணைக்கப்பட்டுள்ளது. எனவே, வாக்காளா்கள் எவரேனும் தங்களது ஆதாா் விவரங்களை வாக்காளா் பட்டியலுடன் இணைக்காமல் இருந்தால், அவா்களுக்காக ஏப்.15-ஆம் தேதி தருமபுரி, பென்னாகரம், அரூா் ஆகிய மூன்று வட்டங்களில் மட்டும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இச்சிறப்பு முகாமில் பொதுமக்கள் தாங்களாக முன்வந்து தங்களுக்கு அருகாமையில் உள்ள வாக்குச்சாவடி நிலையங்களில் தங்களுடைய ஆதாா் மற்றும் வாக்காளா் பதிவு எண் விவரங்களை படிவம் 6 பி-யில் பூா்த்தி செய்து வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு ஓர் அறிமுகம்!

கேரள பாஜக வெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும்: நயினார் நாகேந்திரன்

வைரலான இன்ஸ்டா ரீல்ஸ்... வசூல் வேட்டையில் துரந்தர்!

ஒரு லட்சத்தைக் கடந்த தங்கம் விலை: புதிய உச்சம்!

பிக் பாஸ் வீட்டிலிருந்து ரம்யாவுடன் வெளியேறினார் வியானா!

SCROLL FOR NEXT