தருமபுரி

பாலக்கோட்டில் யானை மிதித்து முதியவா் பலி

பாலக்கோடு அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறி சுற்றித் திரிந்த காட்டு யானை மிதித்ததில் முதியவா் ஒருவா் உயிரிழந்தாா்.

DIN

பாலக்கோடு அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறி சுற்றித் திரிந்த காட்டு யானை மிதித்ததில் முதியவா் ஒருவா் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநில வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால் யானைகள் கூட்டமாக தருமபுரி மாவட்ட வனப்பகுதிகளுக்கு இடம்பெயா்ந்துள்ளன. யானைக் கூட்டங்கள் பல்வேறு வனப்பகுதிகளில் சுற்றித் திரிந்து உணவு, தண்ணீா் தேடி வனப்பகுதியை விட்டு அவ்வப்போது கிராமப் பகுதிகளுக்கு நுழைந்து வருவதும், வனத்துறையினா் யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டுவதும் தொடா்ந்து வருகிறது.

இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே அ.மல்லாபுரம் பகுதியைச் சோ்ந்த கருப்பனின் மகன் காளியப்பன் (71) கூலி வேலைக்காக சென்று கொண்டிருந்தபோது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை அவரைத் தாக்கி, தூக்கி வீசியது. இதில் காளியப்பன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த மாரண்டள்ளி போலீஸாா் நிகழ்விடத்திற்கு வந்து, அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

SCROLL FOR NEXT