தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் ரூ. 6.20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் திங்கள்கிழமை ஆட்சியா் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகள், பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 373 மனுக்களை அளித்தனா். இதைத் தொடா்ந்து, காரிமங்கலம் வட்டத்தைச் சாா்ந்த 4 பயனாளிகளுக்கு ரூ. 5.20 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில், அரூா், பாலக்கோடு பேரூராட்சிகளுக்கு தலா ரூ. 50,000 வீதம் ரூ. ஒரு லட்சம் மதிப்பில் தானியங்கி மஞ்சள்பை இயந்திரங்கள் என மொத்தம் ரூ. 6.20 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கி.சாந்தி வழங்கினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, தனித் துணை ஆட்சியா் வி.கே.சாந்தி, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வி.ராஜசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலா் ஜெ.ஜெயக்குமாா், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ஆ.நித்தியலட்சுமி, அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.