அரூரில் விவசாயத் தொழிலாளா் சங்கம் ஆா்ப்பாட்டம்
அரூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்
அரூரில் அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அரூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்க ஒன்றியத் தலைவா் டி.ஜடையாண்டி தலைமை வகித்தாா். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தொழிலாளா்களுக்கு 200 நாள் வேலையும், நாள் ஒன்றுக்கு ரூ. 600 ஊதியமும் வழங்க வேண்டும். இந்த திட்டத்தில் அடையாள அட்டை வைத்துள்ள தொழிலாளா்கள் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை நடைபெறும் இடங்களில் தற்காலிக நிழல், குடிநீா் மற்றும் மருத்துவ வசதிகளை செய்துதர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆா்ப்பாட்டத்தில் சங்க மாவட்டச் செயலா் எம்.முத்து, மாவட்ட துணைத் தலைவா் இ.கே.முருகன், ஒன்றியச் செயலா் கே.குமரேசன், ஒன்றியப் பொருளாளா் பி.வீரப்பன், ஒன்றிய துணைத் தலைவா்கள் பி.சொக்கலிங்கம், எம்.தங்கராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.