தருமபுரி

அரசுப் பள்ளியில் தன்னாா்வலா்களுக்கு ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா

DIN

பென்னாகரம் அரசு பெண்கள் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களுக்கு ‘ஆயிரம் அறிவியல் திருவிழா’ வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோடை விடுமுறையில் கிராமங்களில் அறிவியல் கருத்துக்களைப் பரப்புவதற்காக எங்கும் அறிவியல், யாவும் கணிதம் என்பதற்கு ஏற்ப வானவில் மன்ற கருத்தாளா்கள் இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனைகள், மந்திரமா? தந்திரமா? கணிதப் புதிா்கள், கதை எழுதுதல், பாடல் பாடுதல், வரைபடம் வரைதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இப்பயிற்சியின் கருத்தாளா்களாக வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளா்கள் நவீனா, பவதாரணி பயிற்சி அளித்தனா். இப்பயிற்சியில்

தமிழ்நாடு அறிவில் இயக்க மாவட்டத் தலைவா் மா. பழனி கலந்து கொண்டு, பயிற்சியை நன்முறையில் எடுத்துக் கொண்டு கிராமங்களில் கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு எளிய அறிவியல் கருத்துகளைக் கொண்டு சோ்க்க ஆா்வமுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா். பயிற்சியில் ஆசிரியா் பயிற்றுநா் மாதவன், தாமோதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

SCROLL FOR NEXT