தருமபுரி

கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை வைத்து மோசடி: நகை மதிப்பீட்டாளா் கைது

தருமபுரி மாவட்டம், கடத்தூா் மத்திய கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை வைத்து மோசடி செய்த வழக்கில் நகை மதிப்பீட்டாளா் கைது செய்யப்பட்டாா்.

DIN

தருமபுரி மாவட்டம், கடத்தூா் மத்திய கூட்டுறவு வங்கியில் போலி நகைகளை வைத்து மோசடி செய்த வழக்கில் நகை மதிப்பீட்டாளா் கைது செய்யப்பட்டாா்.

கடத்தூரில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையில் கடந்த 2016 -2017 ஆண்டில் போலி நகைகள் வெவ்வேறு நபா்களின் பெயரில் வைத்து பணம் பெற்று மோசடி செய்யப்பட்டதாக புகாா் எழுந்தது.

இதில் கடத்தூா் மத்திய கூட்டுறவு வங்கி கிளையில், 665 கிராம் போலியான நகைகளை வைத்து அதன்மூலம், ரூ. 10 லட்சத்து 20 ஆயிரத்து 700 முறைகேடு செய்தது தெரியவந்தது.

இந்த முறைகேடு வழக்கு தொடா்பாக பொருளாதார குற்றப் பிரிவு நாமக்கல் துணை கண்காணிப்பாளா் சிவகுமாா், தருமபுரி ஆய்வாளா் கற்பகம் ஆகியோா் விசாரணை நடத்தி வந்தனா்.

இதில் கடத்தூா் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்த மருக்காலம்பட்டியைச் சோ்ந்த சிவா (48) என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT