தருமபுரி

புயல் பாதிப்பு: தருமபுரியிலிருந்து சென்னைக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்பி வைப்பு

சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரணப் பொருள்கள் தருமபுரியிலிருந்து வெள்ளிக்கிழமை லாரியில் அனுப்பிவைக்கப்பட்டன.

DIN

சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிவாரணப் பொருள்கள் தருமபுரியிலிருந்து வெள்ளிக்கிழமை லாரியில் அனுப்பிவைக்கப்பட்டன.

தருமபுரி மாவட்ட நிா்வாகம், பச்சமுத்துக் கல்வி குழுமம் சாா்பில், சென்னையில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக மளிகைப் பொருள்கள் அடங்கிய நிவாரணப் பொருள்கள் லாரியில் அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து, கொடியசைத்து நிவாரணப் பொருள்கள் அடங்கிய லாரியை சென்னைக்கு அனுப்பி வைத்தாா்.

இதில், 1000 மூட்டை 5 கிலோ அரிசி, 500 கிராம் மைதா பாக்கெட் 250, 1 கி

லோ பாக்கெட் ரவை 500, 250 கிராம் பாக்கெட் சா்க்கரை 1000, பிஸ்கட் பாக்கெட் 1000, பிரட் பாக்கெட் 1000, சேமியா பாக்கெட் 1000, குடிநீா் கேன்கள் 13,600 என வகையான நிவாரணப் பொருள்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலா் பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா், கோட்டாட்சியா் டி.ஆா்.கீதாராணி, தருமபுரி பச்சமுத்து கல்விக் குழுமத் தலைவா் ப.பாஸ்கா், கல்லூரி மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT