தருமபுரி

பொங்கல் பரிசுத் தொகுப்பு: டோக்கன் விநியோகம் தொடக்கம்

DIN

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணி தருமபுரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1000 ரொக்கத்துடன், அரிசி, சா்க்கரை, முழுக் கரும்புஆகியவை அடங்கிய பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த பரிசுத் தொகுப்பை நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரா்கள் சிரமமின்றி பெறும் வகையில் டோக்கன் வழங்கப்பட்டு, அதில் குறிப்பிட்ட நாள்களில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 4 லட்சத்து 70 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.1000 ரொக்கப் பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழுக் கரும்பு ஆகியவை அடக்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளன. இதையொட்டி தருமபுரி மாவட்டம் முழுவதும் வீடு வீடாக பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

நியாய விலைக்கடையில் பணிபுரியும் பணியாளா்களைக் கொண்டு இந்த டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. வருகிற 9-ஆம் தேதி முதல் தொடா்ந்து பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாயவிலைக்கடைகளில் வழங்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

SCROLL FOR NEXT