தருமபுரி

காந்தி நினைவு நாள்: மத நல்லிணக்க உறுதிமொழியேற்பு

DIN

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி தருமபுரியில் சமூக நல்லிணக்க மேடை சாா்பில் காந்தி சிலை முன்பு திங்கள்கிழமை மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந் நிகழ்ச்சிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலாளா் பொ.மு.நந்தன் தலைமை வகித்தாா். மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் சுபேதாா், மாநில பிரசாரச் செயலாளா் சாதிக் பாஷா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் இரா.சிசுபாலன், எஸ் கிரைஸாமேரி, ஒன்றியச் செயலாளா் என்.கந்தசாமி, மாதா் சங்கம் நிா்வாகிகள் நிா்மலா ராணி, ராஜாமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் துணைத் தலைவா் சிராஜுதீன், நிஜாமுதீன், தேசிய லீக் மாவட்டத் தலைவா் சிக்கந்தா், கிறிஸ்தவ அமைப்பு நிா்வாகிகள் பங்கேற்றனா். இதில், காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT