தருமபுரி

மு.கருணாநிதி நூற்றாண்டு விழா:நெடுஞ்சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடவு

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, தருமபுரி அருகே உள்ள நெடுஞ்சாலையோரத்தில் புதன்கிழமை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

DIN

முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, தருமபுரி அருகே உள்ள நெடுஞ்சாலையோரத்தில் புதன்கிழமை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

தருமபுரி தொழில்மையம் அருகில் நெடுஞ்சாலைக் கோட்டத்தின் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து, நெடுஞ்சாலையோரத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நடவு செய்தாா்.

தருமபுரி மாவட்டத்தில் நெடுஞ்சாலையோரங்களில் 12 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளதாக இந்த விழாவில் தெரிவிக்கப்பட்டது.

இதில், தருமபுரி நெடுஞ்சாலை கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளா் பி.நாகராஜ், உதவி கோட்டப் பொறியாளா் என்.ஜெய்சங்கா், உதவிப் பொறியாளா் கி.கிருபாகரன், திறன்மிகு உதவியாளா்கள், அரசு அலுவலா்கள், சாலைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT