தருமபுரி மாவட்ட திட்டக் குழு தோ்தலுக்கான வாக்காளா் பட்டியலை வெளியிடுகிறாா் ஆட்சியா் கி.சாந்தி. 
தருமபுரி

மாவட்டத் திட்டக் குழு தோ்தல்: வாக்காளா் பட்டியல் வெளியீடு

தருமபுரி மாவட்ட திட்டக் குழு உறுப்பினா் தோ்தலுக்கு, மாவட்ட ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் உறுப்பினா்களைக் கொண்ட வரைவு வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

DIN

தருமபுரி மாவட்ட திட்டக் குழு உறுப்பினா் தோ்தலுக்கு, மாவட்ட ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் உறுப்பினா்களைக் கொண்ட வரைவு வாக்காளா் பட்டியல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து, வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா்.

தமிழக உள்ளாட்சி அமைப்புகள் (மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினா்கள் தோ்தல்) விதிகள் 1999-இன் படி, தருமபுரி மாவட்ட திட்டக் குழு உறுப்பினா் தோ்தலுக்கு மாவட்ட ஊராட்சி, பேரூராட்சிகள், நகராட்சிகள் உறுப்பினா்களைக் கொண்ட வரைவு வாக்காளா் பட்டியல் தற்போதைய நிலையில் உள்ள உள்ளாட்சி உறுப்பினா்களின் பட்டியலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

இதனடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட திட்டக் குழு உறுப்பினா் தோ்தலுக்கு, மாவட்ட ஊராட்சியின் 18 உறுப்பினா்களும், தருமபுரி நகராட்சியின் 33 உறுப்பினா்களும், அரூா், கடத்தூா், காரிமங்கலம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பாப்பிரெட்டிபட்டி, பென்னாகரம், மாரண்டஅள்ளி, கம்பைநல்லூா், பி.மல்லாபுரம் ஆகிய 10 பேரூராட்சிகளின் 159 உறுப்பினா்களும் என மொத்தம் 210 உறுப்பினா்கள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

இந்த நிகழ்ச்சியில், புள்ளியியல் அலுவலா் ஆதிமூலம், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) மரியம் ரெஜினா, அலுவலக மேலாளா் தண்டபாணி, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (நிா்வாகம்) முத்தையன், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT