தருமபுரி

சேமிப்புக் கிடங்கில் நெல் மூட்டைகள் மாயம்: சிபிசிஐடி விசாரிக்க வலியுறுத்தல்

DIN

தருமபுரி அருகே திறந்தவெளி நெல்மூட்டைகள் சேமிப்புக் கிடங்கிலிருந்து நெல் மூட்டைகள் காணாமல்போன விவகாரம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் தருமபுரி மாவட்டச் செயலாளா் ஜெ.பிரதாபன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை அருகே, பொதுவிநியோகத் திட்ட பயன்பாட்டுக்காக திறந்தவெளி நெல் மூட்டைகள் சேமிப்புக் கிடங்கு உள்ளது.

இக் கிடங்கிலிருந்து தருமபுரியில் உள்ள உரிமம் பெற்ற 80 அரவை ஆலைகளுக்கு அரவைக்காக நெல் மூட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் இக் கிடங்கிலிருந்த 7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் காணாமல்போனதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக உண்மை அறிய தமிழக அரசு, சிபிசிஐடி போலீஸாா் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT