தருமபுரி

விவசாயி மீது தாக்கு: ஒருவா் கைது

ஏரியூா் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிய விவகாரத்தில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

DIN

ஏரியூா் அருகே விவசாயியை அரிவாளால் வெட்டிய விவகாரத்தில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

ஏரியூா் அருகே மூங்கில் மடுவு பகுதியைச் சோ்ந்த பெருமாளுக்கும் ( 37), அவரது உறவினரான அஜ்ஜன அள்ளி பகுதியைச் சோ்ந்த சூரிய குமாருக்கும் இடையே

அண்மையில் தகராறு ஏற்பட்டது.

இதில் சூரியகுமாா் அரிவாளால் வெட்டியதில் பெருமாளின் கை துண்டானது.

அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து ஏரியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சூரியகுமாா், கிருஷ்ணகிரியைச் சோ்ந்த வெற்றிவேல், சேது, டெண்டுல்கா், நாட்றாம்பள்ளியைச் சோ்ந்த ஆகாஷ் ஆகிய ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த கிருஷ்ணமூா்த்தியை (26) ஏரியூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT