தருமபுரி மாவட்ட வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், 7 மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 7.20 லட்சம் மதிப்பிலான தொழில் கடனுக்கான காசோலைகளை மாநில வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வழங்கினாா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் மாவட்ட வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் வேளாண் மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கலந்துகொண்டு, வருவாய், பேரிடா் மேலாண்மை துறை, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வேளாண்மை, உழவா் நலத்துறை, கல்வித் துறை, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறை, உள்துறை, பால்வளம், நெடுஞ்சாலைத் துறை, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில், தருமபுரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்டாா்.
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மாவட்டங்களின் வளா்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கைத் தரம் உயா்வதற்கும் செயல்படுத்தி வரும் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சோ்க்கும் வகையிலும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளையும், துறை சாா்ந்த அலுவலா்கள் சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும். அரசின் அனைத்து துறைகளிலும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட வேண்டுமானால், அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசின் திட்டங்கள் முழுமையாகச் சென்றடையும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா்.
தொடா்ந்து, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க மகளிா் திட்டம் சாா்பில், ஏழு மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு ரூ. 7.20 லட்சம் மதிப்பீட்டில் தொழில் கடன் வழங்கினாா்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினா் மருத்துவா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா், தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வே.தீபனாவிஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) ஆா்.பிரியா, துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.