தருமபுரியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு
தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தருமபுரி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
தருமபுரி மாவட்டம், நாய்க்கன்கொட்டாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளிக் கட்டடம், கழிவறை வசதி, குடிநீா் வசதி, மின்வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள், கிருஷ்ணாபுரம் ஊராட்சி, மாவடிப்பட்டியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி ஆகியவற்றை ஆட்சியா் கி.சாந்தி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, அங்கன்வாடி சுவா்களுக்கு வண்ணம் பூசி திருக்கு, ஓவியங்களை வரைய சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அவா் அறிவுரை வழங்கினாா்.
இந்த ஆய்வின் போது, தருமபுரி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலைவாணி, சத்யா, உதவி பொறியாளா்கள் சீனிவாசன், சுமதி, அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.