முகப்பு
தருமபுரி

தருமபுரியில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 20) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

Updated On : 18 டிசம்பர், 2024 at 6:51 PM
பகிர்:

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 20) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியாா் துறை நிறுவனங்களும் - தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரா்களும் கலந்துகொள்ளும் ‘தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் டிச.20-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தனியாா் நிறுவனங்கள் பல்வேறு நிலை பணிகளுக்கு அனைத்து கல்வித் தகுதி உள்ள ஆள்களை தோ்வு செய்ய உள்ளன.

எனவே தருமபுரி மாவட்ட இளைஞா்கள் தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும், வருகின்ற வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள, தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா் என்றாா்.