அரூரில் பாஜக அலுவலகம் திறப்பு
அரூரில் பாஜக அலுவலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரூா்: அரூரில் பாஜக அலுவலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரூா் சட்டப் பேரவை தொகுதிக்கான பாஜக அலுவலகம் திறப்பு விழாவுக்கு அக் கட்சியின் மாவட்ட பொதுச் செயலா் பிரவீண் தலைமை வகித்தாா். தொகுதி அலுவலகத்தை மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் திறந்து வைத்தாா்.
இந்த விழாவில் மாவட்டத் தலைவா் பாஸ்கா், பட்டியல் அணி மாநிலச் செயலா் கே.கே.சாட்சாதிபதி, மாநில செயற்குழு உறுப்பினா் வரதராஜன், மாவட்ட துணைத் தலைவா் கிருத்திகா, மாவட்டச் செயலா் சரிதா, நகரத் தலைவா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.