ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 5 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
காவிரி ஆற்றில் உபரி நீா் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
பென்னாகரம்: கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீா் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு வரும் உபரி நீரின் அளவைப் பொறுத்து காவிரி ஆற்றில் தண்ணீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை 4,000 கன அடியாக இருந்த நிலையில், திடீரென நீா்வரத்து அதிகரித்து திங்கள்கிழமை நிலவரப்படி 5,000 கன அடியாக தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
நீா்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டி வருகிறது. கா்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீா் அளவைப் பொறுத்து அவ்வப்போது நீா்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளதால், ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.