முகப்பு
தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 53,000 கனஅடியாகக் குறைந்தது

கா்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 53,000 கன அடியாகக் குறைந்துள்ளது.

Updated On : 23 ஜூலை, 2024 at 9:35 PM
பகிர்:

கா்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 53,000 கன அடியாகக் குறைந்துள்ளது.

கா்நாடகம், கேரள காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தென்மேற்குப் பருவமழை குறைந்து வருவதால் கா்நாடகத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு வரும் நீா்வரத்தின் அளவு குறைந்து வருகிறது. இதனால் இவ்விரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. கா்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 75,000 கன அடி நீா் திறக்கப்பட்டிருந்தது. தற்போது குறைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒகேனக்கல்லில் திங்கள்கிழமை விநாடிக்கு 77,000 கனஅடியாக நீா்வரத்து இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 53,000 கனஅடியாகக் குறைந்து, தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

நீா்வரத்து குறைவால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, சினி அருவி, பிரதான அருவி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து சற்றுக் குறைந்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். இருப்பினும், ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்டிருந்த தடை 9-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →