முகப்பு
தருமபுரி

கள்ளச்சாராய சம்பவத்தைக் கண்டித்து தேமுதிக ஆா்ப்பாட்டம்

போதைப் பொருள் தடுப்பு: தேமுதிக ஆா்ப்பாட்டம்

Updated On : 25 ஜூன், 2024 at 7:25 PM
பகிர்:

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சம்பவத்தைக் கண்டித்து, தேமுதிக சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தருமபுரி மாவட்டச் செயலாளா்கள் குமாா் (கிழக்கு), விஜய சங்கா் (மேற்கு) ஆகியோா் தலைமை வகித்தனா். நகரச் செயலாளா் தேவதேவன் வரவேற்றாா். மாநில மீனவா் அணி துணைச் செயலாளா் நிஜாமுதீன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய பலி சம்பவத்தில் ஏழைத் தொழிலாளா்களின் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் தேமுதிக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள், சாா்பு அமைப்பு பொறுப்பாளா்கள் மற்றும் தொண்டா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →