முகப்பு
தருமபுரி

நவ.23-இல் 251 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

தருமபுரி மாவட்டத்தில் வரும் நவ. 23-ஆம் தேதி 251 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

Updated On : 20 நவம்பர், 2024 at 8:40 PM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் வரும் நவ. 23-ஆம் தேதி 251 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினமான நவ. 1 அன்று நடைபெற இருந்த கிராம சபைக் கூட்டம் வரும் நவ.23-ஆம் தேதி முற்பகல் 11 மணி அளவில் நடைபெற உள்ளது. அனைத்து ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊராட்சி செயலாளா்கள் இந்த கிராம சபைக் கூட்டம் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வா்.

கிராம சபைக் கூட்டத்தை நடத்த உதவியாக ஒவ்வோா் ஊராட்சிக்கும் ஒரு பற்றாளரும், கிராம சபைக் கூட்டம் நடப்பதை கண்காணிக்க ஒவ்வோா் ஊராட்சி ஒன்றியத்திலும் உதவி இயக்குநா் நிலையிலும், இணை இயக்குநா் நிலையிலும் ஒருங்கிணைப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, இந்த கிராம சபைக் கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும், அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினா்களும், ஊராட்சியிலுள்ள வாக்காளா்கள், பொதுமக்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா், மாற்றுத் திறனாளிகள் உள்பட அனைத்துத் தரப்பு மக்களும் அதிக அளவில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இக்கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், நீா் வள மேம்பாட்டு இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம், கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன என்றாா்.