ஒகேனக்கல்லில் நீா்வரத்து குறைவு
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 6,000 கன அடியாகக் குறைந்துள்ளது.
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 6,000 கன அடியாகக் குறைந்துள்ளது.
கா்நாடக மாநிலத்தில் காவிரி கரையோர வனப்பகுதிகளில் பெய்து வந்த மழை அளவு குறைந்ததை அடுத்து காவிரி ஆற்றில் கடந்த சில நாள்களாக நீா்வரத்து குறைந்து வருகிறது.
ஒகேனக்கல்லுக்கு புதன்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 9,000 கன அடியாக நீா்வரத்து இருந்த நிலையில், வியாழக்கிழமை 6,000 கன அடியாகக் குறைந்து தமிழக-கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.