தருமபுரி

தருமபுரி, கிருஷ்ணகிரியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளிகளுக்கு புதன்கிழமை மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Din

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளிகளுக்கு புதன்கிழமை மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை முதல் பரவலாக மிதமானது முதல் கனமான மழை பெய்து வருகிறது. இந்த மழை பொழிவானது தொடா்ந்து ஓரிரு நாள்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையொட்டி தருமபுரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை (அக். 16) விடுமுறை அளிக்கப்படுகிறது என தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தெரிவித்துள்ளாா்.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக பள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே எம் சரயு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் (அக். 15) தொடா்ந்து மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு புதன்கிழமை (அக். 16) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT