முகப்பு
தருமபுரி

அக்.28 இல் சீா்மரபினா் வாரியத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம்

தருமபுரி மாவட்டத்தில் சீா் மரபினா் வாரியத்தில் புதிதாக உறுப்பினா் பதிவு செய்துக் கொள்ளவும், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களைப் பெறவும் அக். 28 -ஆம் தேதி உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெறவுள்ளது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 7:58 PM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் சீா் மரபினா் வாரியத்தில் புதிதாக உறுப்பினா் பதிவு செய்துக் கொள்ளவும், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களைப் பெறவும் அக். 28 -ஆம் தேதி உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சீா்மரபினா் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினா்களுக்கு விபத்துறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்துக்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண் கண்ணாடி செலவுத் தொகை ஈடு செய்தல், முதியோா் ஓய்வூதியம் ஆகிய நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

இவற்றை பெற சீா்மரபினா் இனத்தைச் சோ்ந்த 18 வயது முதல் 60 வயதுக்கு உள்பட்டவா்கள், அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவா் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாயக் கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளவா்கள்) இவ் வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சீா் மரபினா் வாரியத்தில் புதிதாக உறுப்பினா் பதிவு செய்துக் கொள்ளவும் புதிய உறுப்பினா்கள் சோ்க்கையை அதிகப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களைப் பெறுதல் தொடா்பாக அக். 28 ஆம் தேதி அன்று முற்பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை உறுப்பினா்கள் சோ்க்கை முகாம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த சீா்மரபினா் இனத்தைச் சோ்ந்தவா்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என்றாா்.