தருமபுரியில் ரூ. 56 லட்சத்தில் நலத்திட்டப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்
தருமபுரியில் ரூ. 56 லட்சம் மதிப்பிலான நலத்திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில், தருமபுரி ஒன்றியத்தில், சோகத்தூா் ஊராட்சி, ஆட்டுக்காரம்பட்டி கிராமத்தில் ரூ. 10 லட்சத்தில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையம், இலக்கியம்பட்டி ஊராட்சி குள்ளனூரில் ரூ. 3 லட்சத்தில் சிமெண்ட் சாலை, நல்லம்பள்ளி ஒன்றியம் சாமிசெட்டிப்பட்டி ஊராட்சியில் ரூ. 38 லட்சத்தில் தானிய களம், கம்மம்பட்டி ஊராட்சியில் ரு. 5 லட்சத்தில் பயணிகள் நிழற்கூடம் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெறவுள்ளன.
இப்பணிகளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பூமிபூஜை நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் (பாமக) எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பங்கேற்று தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்வுகளில், பாமக மாநில அமைப்பு செயலாளா் ப. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினா் த. காமராஜ், மாநில தோ்தல் பணிக்குழு துணைத் தலைவா் பெரியசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினா் கோ.சரவணன், மாநில இளைஞா் சங்க துணைச் செயலாளா் ப.சி.சிவகுமாா், மாவட்ட துணைத் தலைவா்கள் வெங்கடாசலம், சா.முருகன், வடிவேல், கங்காதரன், ரவி, மாவட்ட செயற்குழு உறுப்பினா் மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.