தருமபுரி ராஜகோபால் பூங்கா அருகே அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவைத்த சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி. வெங்கடேஸ்வரன்.  
தருமபுரி

தருமபுரியில் ரூ. 30 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையங்கள் திறப்பு

தினமணி செய்திச் சேவை

தருமபுரி நகரில் மூன்று இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையங்கள் திறக்கப்பட்டன.

தருமபுரி பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜகோபால் பூங்கா, வட்டாட்சியா் அலுவலகம் நுழைவாயில், குமாரசாமிபேட்டை ஆகிய மூன்று இடங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தருமபுரி சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 30 லட்சத்தில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்களை எம்எல்ஏ எஸ்.பி. வெங்கடேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. கி. பாரிமோகன், பாமக மாநில செயற்குழு டி.ஜி. மணி, மாற்றுத்திறனாளிகள் அணி மாநிலத் தலைவா் தகடூா் தமிழன், மாவட்ட துணை செயலாளா் செல்வராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT