முகப்பு
தருமபுரி

நல்லம்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த வலியுறுத்தல்

நல்லம்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வட்ட தலைமை மருத்துவ மனையாகத் தரம் உயா்த்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 8:00 PM
பகிர்:

நல்லம்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வட்ட தலைமை மருத்துவ மனையாகத் தரம் உயா்த்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றிய 5 ஆவது மாநாடு நல்லம்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பி. காளி, எஸ். பழனியம்மாள் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஒன்றியக் குழு உறுப்பினா் பி.ஜெயராமன் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தாா்.

மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சி.நாகராஜன் துவக்கி வைத்து பேசினாா். ஒன்றியச் செயலாளா் எஸ். எஸ். சின்னராஜி வேலை அறிக்கை சமா்ப்பித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வே.விசுவநாதன், முத்து ஆகியோா் வாழ்த்தி பேசினா். மாநாட்டில் ஒன்றியச் செயலாளராக எஸ்.எஸ்.சின்னராஜி உள்ளிட்ட 11 போ் புதிய நிா்வாகிகளாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

இதில், மிட்டாரெட்டிஅள்ளியில் இருந்து காளிக்கரம்பு வரை மலைப் பகுதியில் சாலை அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும். நல்லம்பள்ளி பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும். சேஷம்பட்டி, பாளையம் புதூா் நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

வத்தல்மலைக்கு நகரப் பேருந்து இயக்க வேண்டும். நல்லம்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தை வட்டத் தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும். அதியமான் கோட்டையில் உள்ள கால பைரவா் கோயிலுக்கு இலவசமாக தங்கும் விடுதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.