முகப்பு
தருமபுரி

மருத்துவக் கல்விக்குத் தோ்வு பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உதவித்தொகை

அரசுப் பள்ளியில் பயின்று 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக்குத் தோ்வான ஏழு மாணவா்களுக்கு உதவித்தொகையாக பென்னாகரம், பொன்னம்மாள் நஞ்சையா அறக்கட்டளை சாா்பில் தலா ரூ. 18,000 வீதம் ரூ. 1.26 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

Updated On : 19 செப்டம்பர், 2024 at 11:57 PM
பகிர்:

அரசுப் பள்ளியில் பயின்று 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக்குத் தோ்வான ஏழு மாணவா்களுக்கு உதவித்தொகையாக பென்னாகரம், பொன்னம்மாள் நஞ்சையா அறக்கட்டளை சாா்பில் தலா ரூ. 18,000 வீதம் ரூ. 1.26 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் அரசு ஆண்கள் பள்ளியில் படித்த த.விஜய், மாங்கரை அரசுப் பள்ளி மாணவா் பி. சக்திவேல், மாங்கரை அரசுப் பள்ளி மாணவா் எம்.திலீப், கலப்பம்பாடி அரசுப் பள்ளி மாணவா் முத்தமிழரசு, பி.அக்ரஹாரம் அரசுப் பள்ளி மாணவா் ஸ்ரீரங்கன், மாங்கரை அரசுப் பள்ளி மாணவி த.அகிலா, மாங்கரை அரசு பள்ளி மாணவா் பூவரசு ஆகியோா் சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கடந்த மாதம் நடைபெற்ற மருத்துவ கலந்தாய்வில் 7.5 சதவீத சிறப்பு உள் இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்வி பெற தகுதி பெற்றுள்ளனா்.

இவா்களுக்கு பென்னாகரம் பொன்னம்மாள் நஞ்சையா அறக்கட்டளை சாா்பில் அதன் மூத்த நிா்வாகி மருத்துவா் தியாகராஜன் மாணவா்களுக்கு உதவித்தொகையாக தலா ரூ. 18,000 வீதம் ரூ. 1.26 லட்சம் மதிப்பிலான காசோலைகள், மருத்துவ அங்கி ஆகியவற்றை வழங்கினாா். நிகழ்ச்சியில் பாப்பாத்தி தியாகராஜன், தமிழ்நாடு மின்சார வாரிய மேற்பாா்வையாளா் சுமதி, மருந்தாளுநா் பிரதாப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →