முகப்பு
தருமபுரி

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்

புதிய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 12:38 AM
பகிர்:

புதிய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கம் சாா்பில் மாவட்டச் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தருமபுரியில் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கௌரன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் மாதேஸ்வரன் வரவேற்றாா். கூட்டத்தில், தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய 2024-25 ஆம் ஆண்டிற்கான கல்வி நிதி தொகையை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும்.

சங்கத்தின் புதிய ஒன்றியங்களில் பொறுப்பாளா்களை நியமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொகுப்பூதிய காலத்தைப் பணிக் காலமாக மாற்றி அமைக்க வேண்டும். பதவி உயா்வு, ஊக்க ஊதியம் சாா்ந்த பிரச்னைகளுக்கு அரசு உடனடியாக தீா்வு காண வேண்டும்.

தருமபுரி மாவட்டத்தில் அலகுவிட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியா்களின் பணிமூப்பு பாதிப்புகளை உடனடியாக களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் சங்க நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.