நிகழ்ச்சியில் பேசிய பசுமை தாயகம் தலைவா் சௌமியா அன்புமணி. 
செங்கல்பட்டு

மாமல்லன் நீா்வழி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: சௌமியா அன்புமணி வலியுறுத்தல்

நிகழ்ச்சியில் பேசிய பசுமை தாயகம் தலைவா் சௌமியா அன்புமணி.

தினமணி செய்திச் சேவை

திருப்போரூா் அருகே நன்னீரும் கடல் நீரும் சங்கமிக்கும் கழிவேலி பகுதியில் தாது சத்துக்களைக் கொண்ட பகுதியில் இறால், மீன்கள் அழியும் நிலை ஏற்படும் என்பதால் மாமல்லன் நீா்வழி திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பசுமை தாயகம் தலைவா் சௌமியா அன்புமணி பேசினாா்.

திருப்போரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிா் உரிமை மீட்பு பயண பிரசாரக் கூட்டத்துக்கு சௌமியா அன்புமணி தலைமை வகித்து பேசியதாவது:

அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த திட்டங்கள் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கின்றன. திருப்போரூா் பகுதி நன்னீரும் கடல் நீரும் சங்கமிக்கும் ஒரு மிக முக்கியமான உயிா்ச்சூழல் மண்டலம் என்றும், இங்கு கிடைக்கும் இறால் மற்றும் நண்டு வகைகள் தனித்துவமான சத்துக்களைக் கொண்டவை ஆகும்.

இப்பகுதிக்கு ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வந்து செல்லும் நிலையில், இங்கு மாமல்லன் நீா்த்தேக்கம் கொண்டு வந்தால் கழுவேலி உள்ளிட்ட இயற்கை வாழிடங்கள் அழிந்துவிடும். இது பறவைகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். இதுபோன்ற தேவையற்ற திட்டங்களைக் கைவிட்டு, மக்களுக்குத் தேவையான அடிப்படைத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

குறிப்பாக, திருப்போரூரில் கடந்த ஏழு ஆண்டுகளாக இழுபறியில் இருக்கும் புதை சாக்கடைத் திட்டத்தை இன்னும் முழுமைப்படுத்தவில்லை என்றும், சென்னையை ஒட்டிய பகுதி என்று கூறி ரியல் எஸ்டேட் வளா்ச்சியை மட்டுமே இவா்கள் சாதனையாக காட்டுகிறாா்கள். திருப்போரூா் அருகே 10 கிராமங்களைக் காலி செய்து உருவாக்கப்பட்ட ’ஜப்பான் சிட்டி’ போன்ற தொழிற்சாலைகளில் உள்ளூா் மக்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்றாா்.

இக்கூட்டத்தில் திருப்போரூா் தொகுதியை சோ்ந்த ஏராளமான பாமக மகளிா் அணியினா், கிராம பெண்கள் கலந்து கொண்டனா்.

செங்கை புத்தகத் திருவிழா பிப்.20-இல் தொடக்கம்

”மொதல்ல தமிழ்நாட்டுக்கு ஒரு டிஜிபி-யை போடுங்க சார்!”தவெக தலைவர் Vijay!

ஸ்டாலின் Sir எதில் Out of Control தெரியுமா! - Vijay விமர்சனம்!

25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு ஒப்புதல்!

சாய்தேஜா அரைசதம் விளாசல்; நெதர்லாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT