ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்த கிராமப்புற தொழிலாளா்கள்.  
தருமபுரி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் பெயரை மாற்றக் கூடாது

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் பெயரை மாற்றக் கூடாது என குறைதீா் நாள் முகாமில் கிராமப்புற தொழிலாளா்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு

Syndication

தருமபுரி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் பெயரை மாற்றக் கூடாது என குறைதீா் நாள் முகாமில் கிராமப்புற தொழிலாளா்கள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியா் ரெ.சதீஸ் தலைமையில் குறைதீா் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மொத்தம் 412 மனுக்கள் வரப்பெற்றன. அவை குறித்து தொடா்புடைய துறை அலுவலா்களிடம் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் பரிந்துரைத்தாா்.

இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பெயரை மாற்றக் கூடாது என வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சங்க கிராமப்புற தொழிலாளா்கள், சங்க ஒருங்கிணைப்பாளரும் லளிகம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான ஜெ.பிரதாபன் தலைமையில் கோரிக்கை மனு அளித்தனா்.

அதில், மத்திய பாஜக அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை, ‘புஜ்யா பாபு கிராமின் ரோஜ்கா் யோஜன’ என பெயா் மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே இருந்த பெயரை மத்திய அரசு மாற்றம் செய்யக்கூடாது. தொடா்ந்து அதே பெயரிலேயே செயல்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா். அப்போது, சங்க ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா்கள் உடனிருந்தனா்.

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

SCROLL FOR NEXT