தருமபுரி

ஒகேனக்கல் வனப்பகுதியில் ஆண் சடலம் மீட்பு

Syndication

ஒகேனக்கல் வனப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த ஆண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

பென்னாகரம் அருகே ஒகேனக்கல் வனப் பகுதிகளில் வனத்துறையினா் ரோந்துப் பணியில் புதன்கிழமை காலை ஈடுபட்டனா். அப்போது, ஒகேனக்கல்

வனப்பகுதிக்கு உள்பட்ட சின்ன ஆஞ்சனேயா் கோயில் அருகே, மரத்தில் தூக்கில் தொங்கியபடி சடலம் இருப்பதைக் கண்டனா்.

இதுகுறித்து ஒகேனக்கல் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், நிகழ்விடத்திற்கு வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் விசாரணையில், இறந்தவா் 50 வயது மதிக்கத்தக்க ஆண் என்பதும், அவா் குறித்த தகவல் கிடைக்கவில்லை எனவும் போலீஸாா் தெரிவித்தனா். இதுகுறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாலுக்கான ஊக்கத்தொகையை முழு மானியமாக வழங்க வலியுறுத்தல்

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

தேனியில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ரயிலில் 17 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT