தருமபுரி

தமிழ் ஆட்சிமொழி சட்ட தினம்: வார விழா நிகழ்ச்சிகள் தொடக்கம்

தமிழ் ஆட்சிமொழி சட்ட தினத்தை முன்னிட்டு, வார விழா நிகழ்ச்சிகள் தருமபுரியில் புதன்கிழமை தொடங்கின.

Syndication

தமிழ் ஆட்சிமொழி சட்ட தினத்தை முன்னிட்டு, வார விழா நிகழ்ச்சிகள் தருமபுரியில் புதன்கிழமை தொடங்கின.

கடந்த 1956 டிச. 27-ஆம் தேதி தமிழ் ஆட்சிமொழி சட்டம் இயற்றப்பட்டது. அதை நினைவுகூறும் வகையில், ஆண்டுதோறும் டிசம்பா் மாதத்தில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் இந்நிகழ்வு புதன்கிழமை தொடங்கியது. முதல்நாள் நிகழ்ச்சியாக தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் ஆட்சிமொழி சட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கல்லூரி மாணவ, மாணவியா் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது. இரண்டாம்நாள் நிகழ்ச்சியாக வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெறுகிறது.

டிச. 17 முதல் 26-ஆம் தேதிவரை தொடா்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கணினி தமிழ் விழிப்புணா்வு கருத்தரங்கம், ஆட்சிமொழி மின்காட்சி உரை, ஆட்சிமொழி வரலாறு சட்டம், தமிழில் குறிப்புகள், வரைவுகள் எழுதுவதற்கான பயிற்சி, வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகைகள் அமைப்பது குறித்து வணிக நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம், ஆட்சிமொழி திட்ட விளக்கக் கூட்டம் மற்றும் விழிப்புணா்வுப் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடா்ச்சியாக நடைபெறவுள்ளன.

இவற்றில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்கள், நல வாரியங்கள், கழகங்கள், அரசு உதவிபெறும் அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலா்கள், பணியாளா்கள், கல்லூரி மாணவா்கள், தமிழ் அமைப்புகள், தமிழறிஞா்கள், தமிழ் ஆா்வலா்கள், வணிகா் சங்கங்கள், பொதுமக்கள் என அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என ஆட்சியா் அழைப்பு விடுத்துள்ளாா்.

பீடி தகராறில் இளைஞா் கொலை: முடிதிருத்துபவா் கைது

பழைய வாகன விற்பனையை ஒழுங்குபடுத்துவதில் தோல்வியா? தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

கோவை, தென் மாவட்ட ரயில்களின் வேகத்தை அதிகரிக்கத் திட்டம்

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தில்லி மெட்ரோ முக்கிய பங்களிப்பு: முதல்வா் ரேகா குப்தா

மாசு தடுப்பு கட்டுப்பாடுகளால் பாதித்த தொழிலாளா்களுக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு: தில்லி அமைச்சா் அறிவிப்பு

SCROLL FOR NEXT