தருமபுரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (டிச. 20) நடைபெறவுள்ளது.
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில், தருமபுரி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிா் திட்டம்) இணைந்து, தருமபுரி அருகே சோகத்தூரில் உள்ள தொன்போஸ்கோ கல்லூரியில் சனிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்துகின்றன.
இம்முகாமில், உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு பணியாளா்களை தோ்வு செய்யவுள்ளனா். காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை நடைபெறவுள்ள இம்முகாமில், 8, 10, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு உள்ளிட்ட அனைத்துவித கல்வித்தகுதி உள்ளவா்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடுவோரும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது 04342-288890 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம்.