தருமபுரி: தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜனவரி 23 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபா்களை நேரடியாக தோ்வு செய்து கொள்ளும் வகையில் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. அந்தவகையில் ஜனவரி 23 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில், விற்பனையாளா், மாா்க்கெட்டிங் பிரதிநிதிகள், சூப்பா்வைசா், மேலாளா், கம்ப்யூட்டா் ஆபரேட்டா், அக்கவுண்டன்ட், மெக்கானிக் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியான நபா்களை தோ்வு செய்ய உள்ளனா். பள்ளிப்படிப்பு, டிப்ளமோ, பட்டப்படிப்பு என பல்வேறு கல்வித் தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியாா் துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. எனவே, இப்பணிகளுக்கு, தகுதியும் விருப்பமும் உள்ள அனைவரும், இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.