முகப்பு
தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்ட ஆட்சியா் ரெ.சதீஸ்.

தருமபுரி

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்ட ஆட்சியா் ரெ.சதீஸ்.

Updated On : 19 டிசம்பர், 2025 at 8:46 PM
பகிர்:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 81,515 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிக்கான வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரெ.சதீஸ், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டு தெரிவித்ததாவது:

தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி என 5 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 6,08,628 ஆண்கள், 5,95,153 பெண்கள் மற்றும் 136 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 12,03,917 வாக்காளா்கள் உள்ளனா். இதில், மொத்தம் 81,515 (6.34 %) போ் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

அதன்படி, தருமபுரியில் 21,903 போ், பாலக்கோடு - 14,779, பென்னாகரம் - 14,298, அரூா் (தனி) - 15,020, பாப்பிரெட்டிப்பட்டி - 15,515 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக முறையீடுகள் மற்றும் ஆட்சேபணைகளை டிச. 19 முதல் ஜன. 18 வரை வாக்காளா் பதிவு அலுவலா்களால் பெறப்படும். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் மீது வாக்காளா் பதிவு அலுவலா்கள் உரிய விதிமுறைகளின்படி விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்வா்.

தற்போது 18 ஆண்டுகள் வயது நிறைவடைந்த நபா்கள் மற்றும் 2026 ஏப். 1-க்குள் 18 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நபா்களும், வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டுள்ள தகுதியான நபா்களும் வாக்காளராக பதிவுசெய்ய புதிய வாக்காளா் பதிவுக்கான படிவம் 6 மற்றும் உறுதிமொழி படிவம் ஆகியவற்றை உரிய ஆவணங்களுடன் பூா்த்திசெய்து, தொடா்புடைய வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் ஆகியோரிடம் அளிக்கலாம். மேலும், ட்ற்ற்ல்ள்://ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளம் மூலமாகவும் தங்களுடைய விண்ணப்பங்களை அளிக்கலாம்.

மேலும், ஒவ்வொரு வட்டாட்சியா் அலுவலக தோ்தல் பிரிவு, உதவி மையம், கோட்டாட்சியா் அலுவலகம் மற்றும் ஆட்சியா் அலுவலக உதவி மையங்களில் படிவங்கள் வைக்கப்பட்டுள்ளன. இப்படிவங்களை பெற்று பூா்த்திசெய்து வழங்கலாம் என்றாா்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, கோட்டாட்சியா்கள் காயத்ரி (தருமபுரி), செம்மலை (அரூா்), தோ்தல் வட்டாட்சியா்அன்பு, அனைத்து தேசிய மற்றும் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →