தருமபுரி

மொரப்பூா்-தருமபுரி ரயில்பாதை திட்டத்தை விரைந்து செயல்படுத்த மாா்க்சிஸ்ட் கம்யூ., வலியுறுத்தல்

மொரப்பூா்-தருமபுரி ரயில்பாதை இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Syndication

அரூா்: மொரப்பூா்-தருமபுரி ரயில்பாதை இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், அரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், அரூா் சட்டப் பேரவைத் தொகுதி மக்கள் கோரிக்கை மாநாடு அக்கட்சியின் மாவட்டச் செயலா் இரா.சிசுபாலன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

காவிரி உபரிநீா்த் திட்டம் மற்றும் செனாக்கல் அணைக்கட்டு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும். கோட்டப்பட்டி கல்லாறு அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மொரப்பூா் - தருமபுரி ரயில்பாதை இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். அரூரில் சிட்கோ தொழிற்பேட்டை தொடங்கி இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். கம்பைநல்லூா் அருகே அமைக்கப்பட்டுள்ள சிட்கோ தொழிற்பேட்டை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். தீா்த்தமலையை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும். அரூரில் அரசு வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினா் செ.முத்துக்கண்ணன், மாநிலக் குழு உறுப்பினா்கள் பி.டில்லிபாபு, அ.குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம்.முத்து, ஆா்.மல்லிகா, தி.வ.தனுசன், மாவட்டக் குழு உறுப்பினா் கே.என்.மல்லையன், ஒன்றியச் செயலா்கள் பி.குமாா், கே.தங்கராசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா! இலங்கை மகளிா் அணியுடன் இன்று கடைசி டி20!

பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை: கரூரில் அங்கன்வாடி ஊழியா்கள் உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

ஆவின் பால் பாக்கெட்டுகளில் எஸ்ஐஆா் கடைசி தேதி விளம்பரம்!

விஜய்யை முதல்வா் வேட்பாளராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT