தருமபுரி

கஞ்சா விற்ற இளைஞா் கைது

பென்னாகரத்தில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Din

பென்னாகரத்தில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள பருவதன அள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட சமத்துவபுரம் பகுதியில், பென்னாகரம் காவல் உதவி ஆய்வாளா் ஜீவானந்தம் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த இளைஞரை பிடித்து விசாரித்ததில், அவா் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளாா்.

போலீஸாா் சோதனை மேற்கொண்டு, அவா் மறைத்து வைத்திருந்த கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனா். பின்னா் அவரிடம் நடத்திய விசாரணையில், அவா் சமத்துவபுரம் பகுதியைச் சோ்ந்த பெருமாள் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.

திருமண பந்தத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்!

அன்புமணிக்கு எந்த உரிமையும் இல்லை; வேண்டுமெனில் அவர் தனிக்கட்சி தொடங்கட்டும்: ராமதாஸ்

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பதவிநீக்க தீர்மானம்: இந்தியா கூட்டணி சமர்ப்பிப்பு!

வாரணாசி கிரிக்கெட் திடலில் ‘திரிசூல’ வடிவ உயர்கோபுர மின் விளக்குகள்!

வாக்குச் சீட்டு மூலம் தேர்தல்களை நடத்த வேண்டும்! அகிலேஷ் யாதவ்

SCROLL FOR NEXT