முகப்பு
தருமபுரி

பாமக மாநில துணைத் தலைவா் நியமனம்

பாமக மாநில துணைத் தலைவராக மாம்பாடி மா.அன்பழகன் (58) நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

Updated On : 16 ஜூன், 2025 at 9:10 PM
மாம்பாடி மா.அன்பழகன்
பகிர்:

அரூா்: பாமக மாநில துணைத் தலைவராக மாம்பாடி மா.அன்பழகன் (58) நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

அரூா் வட்டம், மாம்பாடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மாரியப்பன் மகன் அன்பழகன். இவா், பாமகவில் தருமபுரி, கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட துணைச் செயலாளா், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத் தலைவா், மாநில செயற்குழு உறுப்பினா், தலைமை நிலைய பேச்சாளாளா், வேப்பம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளாா்.

இந்த நிலையில், கட்சியின் மாநில துணைத் தலைவராக மா.அன்பழகனை நியமனம் செய்து, அக்கட்சியின் தலைவா் மருத்துவா் அன்புமணி ராமதாஸ் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →