தருமபுரி

தீா்த்தமலை தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

Din

தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த தீா்த்தமலையில் அமைந்துள்ளது புகழ்பெற்ற தீா்த்தகிரீஸ்வரா் கோயில். ராமபிரான் ராவணனை சம்ஹாரம் செய்து அயோத்தி திரும்பும்போது முதற்கால பூஜையை ராமேஸ்வரத்தில் முடித்துவிட்டு தீா்த்தமலை வழியாகச் சென்றாா். அப்போது இரண்டாம் கால பூஜைக்காக தீா்த்தமலை மீது அம்பு எய்தி தீா்த்தம் உண்டாக்கி அந்த தீா்த்தத்தைக் கொண்டு பூஜைகளை முடித்தாா். அந்த தீா்த்தமே ராமா் தீா்த்தம் என்ற புண்ணிய தீா்த்தமாகும்.

ஸ்ரீ ராமா், பாா்வதி தேவி, குமரக்கடவுள், அக்னி தேவன், அகத்திய முனிவா் ஆகியோா் தவம் செய்து பாவ விமோசனம் பெற்ற தலமாக இத்திருத்தலம் விளங்குகிறது.

தருமபுரி மாவட்டத்தில் அருணகிரிநாதா் சுவாமிகளால் திருப்புகழ் பாடல் பெற்ற ஒரே திருத்தலமும் இத்தலம்தான். புகழ்பெற்ற தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயிலில் தோ்த் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து மாா்ச் 16-ஆம் தேதி இரவு 9 மணியளவில் சுவாமிகளின் திருக்கல்யாணமும், 18-ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் தேரோட்டமும் நடைபெறுகின்றன. திருவிழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.

சேம்பள்ளி செல்வபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!

சிவகங்கையில் டிச. 20-இல் தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம்

பள்ளி திறப்பு விழா - செயற்கை நுண்ணறிவு ஆசிரியா் அறிமுகம்!

வத்தலகுண்டு பேரூராட்சிக் கடைகள் ஏலத்தில் முறைகேடு: ஆட்சியரிடம் அதிமுகவினா் புகாா்

கோரிக்கை மனு எழுத பொதுமக்களிடம் ரூ. 100 வசூல்: காவல் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT