தருமபுரி

பாலக்கோடு பகுதியில் ரூ. 40.48 லட்சத்தில் பல்வேறு பணிகள்

பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில், ரூ. 40.48 லட்சத்தில் மிதிவண்டி நிறுத்தம், பயணியா் நிழற்கூடம், பல்நோக்கு கட்டடங்களுக்கான பணிகளை பாலக்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் வெள்ளிக்கிழமை அடிக்கல் நட்டு தொடங்கிவைத்தாா்.

Syndication

பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில், ரூ. 40.48 லட்சத்தில் மிதிவண்டி நிறுத்தம், பயணியா் நிழற்கூடம், பல்நோக்கு கட்டடங்களுக்கான பணிகளை பாலக்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் வெள்ளிக்கிழமை அடிக்கல் நட்டு தொடங்கிவைத்தாா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மற்றும் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கணபதி ஊராட்சி திருமல்வாடி (கோட்டூா்) அரசு மேல்நிலைப் பள்ளியில் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் சில கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில், ரூ. 12. 63 லட்சத்தில் பேவா் பிளாக் கற்கள் பதிக்கும் பணிகளும், ரூ. 7 லட்சத்தில் மிதிவண்டி நிழற்கூடம் அமைக்கும் பணிகளும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளன.

இப்பணிகளுக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரும் அதிமுக மாவட்டச் செயலாளருமான கே.பி.அன்பழகன் அடிக்கல் நட்டு இப்பணிகளை தொடங்கிவைத்தாா்.

அதேபோல, பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கெண்டேனஅள்ளி கிராமத்தில் ரூ. 5 .65 லட்சத்தில் பயணியா் நிழற்கூடம், கெண்டேனஅள்ளி மற்றும் பெருங்காடு பகுதியில் தலா ரூ. 7.60 லட்சத்தில் பல்நோக்கு கட்டடங்கள் கட்டும் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் அரங்கநாதன், பாலக்கோடு அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் வழக்குரைஞா் செந்தில்,கோபால், நகர செயலாளா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தியா அதிரடி பேட்டிங்: மின்னல் காரணமாக ஆட்டம் நிறுத்தம்!

நம்ம ஊரு பொண்ணு... ஷ்ரேயா கல்ரா!

120 பகதூர்... ராஷி கன்னா!

காந்தா... மிக நீண்ட காத்திருப்பு... துல்கர் சல்மான்!

குருவாயூர் கோயிலில் ரீல்ஸ் விடியோ: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜஸ்னா சலீம்!

SCROLL FOR NEXT