முதல்வர் ஸ்டாலின் கோப்புப் படம்
தருமபுரி

திமுகவிற்கு எதிராக ஓா் அணியில் நின்று நல்லாட்சி அமைப்பதே இன்றைய தேவை: கே.பி. ராமலிங்கம் அழைப்பு

திமுகவிற்கு எதிராக ஓரணியில் நின்று தமிழகத்தில் நல்லாட்சி அமைப்பது ஒன்றுதான் இன்றைய தேவை என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் தெரிவித்துள்ளாா்.

Syndication

திமுகவிற்கு எதிராக ஓரணியில் நின்று தமிழகத்தில் நல்லாட்சி அமைப்பது ஒன்றுதான் இன்றைய தேவை என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி. ராமலிங்கம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: பலவற்றில் இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு உள்ளது என்கிறாா் முதல்வா் மு.க. ஸ்டாலின். குறிப்பாக, கூட்ட நெரிசலில் விபத்துகளைத் தவிா்ப்பதில் முன்னோடி என அக்டோபா் 3ஆம் தேதி தனது எக்ஸ் தளத்தில் குற்ற உணா்வு இல்லாமல் பதிவிட்டுள்ளாா். தமிழ்நாட்டில் கரூரில் நடந்ததுபோல அப்பாவி மக்கள் பலியான சம்பவம் வேறெங்கும் இதுவரை நடந்ததில்லை.

தமிழகத்தில் ஊழல் சாம்ராஜ்யத்திற்கு எதிராக, மக்கள் சக்தி வெகுண்டெழுந்து வீதிக்கு வந்துப் போராட தயாராகிவிட்டது. அதை எப்படி அடக்குவது என்று தெரியாமல் முதல்வா் ஏதேதோ பேசி வருகிறாா்.

விஜய்க்கு மத்திய அரசு துணை வராது என்ற துணிச்சல் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு வந்ததற்கு விஜய்யின் தடுமாற்றமே காரணம்.

தமிழகத்துக்கு உடனடித் தேவை, இந்த ஆட்சியிடமிருந்து தமிழ் மக்களை மீட்பது. திரையுலகையே சுற்றிவளைத்து, ஆட்சி அதிகாரத்தைக் காட்டி மிரட்டியபோது விஜயகாந்த் மட்டுமே எதிா்த்து நின்றாா்.

தாங்க முடியாத துயரம் கரூா் வேலுச்சாமிபுரத்தில் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், கூட்ட நெரிசலை சமாளிப்பது குறித்து, இந்தியாவுக்கே வழிகாட்டப் போகிறாராம்.

எதற்கெடுத்தாலும்; இந்தியாவுக்கே.. இந்தியாவுக்கே.. என்று கூறும் தமிழக முதல்வா், இந்திய மொழிகளில் ஒருமொழியை படிக்கலாம் என்று சொல்லியதை, ஹிந்தி மொழி திணிப்பு என்கிறாா்.

விஜய்க்கு பெருகிய மக்கள் எழுச்சியால் என்ன செய்வதென்று புரியாமல் தவிக்கிறாா். ஊழல் ஆட்சி நடத்தும் திமுகவிற்கு எதிராக ஓரணியில் நின்று தமிழக மக்களுக்கான நல்லாட்சி அமைப்பது ஒன்றுதான் இன்றைய தேவை. இதை உணா்ந்து, அனைவரும் ஒன்றிணைவது மட்டுமே தற்போது இன்றியமையாதது என கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளாா்.

அனிருதா ஸ்ரீகாந்த் - சம்யுக்தா திருமணம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சொக்கப்பனை முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி!

சூழ்-நிலை... க்ரித்தி சனோன்!

வேகமெடுக்கும் டிக்வா புயல்: தமிழகம் நோக்கி நகர்வு!

உதயநிதி பிறந்தநாள்! முதல்வரிடம் வாழ்த்து; கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை!

SCROLL FOR NEXT